ADDED : மே 20, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வெள்ளியணை கே.பிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த ராமன் என்பவரது மகன் பழனிசாமி, 32; இவர் கடந்த, 15ல் மதியம் வீட்டு அருகே உள்ள, பிள்ளையார் கோவிலில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, பழனிசாமியை பாம்பு கடித்துள்ளது.
இதனால், ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி உயிரிழந்தார். இதுகுறித்து, பழனிசாமியின் சகோதரர் ரத்தினம், 57, போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.