/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2025 01:27 AM
கரூர், கரூர் தான்தோன்றிமலையில், வட்டார வளர்ச்சி குழந்தைகள் திட்ட அலுவலகம் முன், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்வி தலைமை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும், அங்கன்வாடி ஊழியர்களை தரவுகளை சேகரிப்பது என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆட்படுத்தி வருகின்றனர். தரவுகளை சேகரிக்கும் முறையை கைவிட வேண்டும். 5 ஜி புதிய மொபைல் வழங்க வேண்டும். மையங்களில் வைபை சேவைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் சூரியகாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.