/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
/
போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 20, 2025 01:50 AM
கரூர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.,) கரூர் கிளை சார்பில், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில், திருமாநிலையூர் போக்குவரத்து பணிமனை முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் கடந்த, 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 23 மாதங்கள் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ளவர்கள் பெறும் அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதிய உயர்வு, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட சி.ஐ.டி.யு., துணைத்தலைவர் ஜீவானந்தம், போக்குவரத்து ஊழியர் சம்மேளன துணை பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட, பலர் பங்கேற்றனர்.