/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 19, 2025 03:10 AM
அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர், நவ. 19
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.A
கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மத்திய அரசு அறிவித்த, மூன்று சதவீத அகவிலைப்படியை முன் தேதியிட்டு, தமிழக அரசு வழங்க வேண்டும், காலமுறை ஊதியத்தில் பணியில் அமர்த்த வேண்டும், 21 மாத ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண் டும், அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள, பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்தல் கால வாக்குறுதிகளை தி.மு.க., அரசு செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் விஜயகுமார், பொருளாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் சிங்கராயர், பொருளாளர் வெங்கடேஸ்வரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.

