/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூன்றாவது சோமவாரத்தில் பக்தர்கள் தரிசனம்
/
மூன்றாவது சோமவாரத்தில் பக்தர்கள் தரிசனம்
ADDED : டிச 02, 2025 02:08 AM
குளித்தலை, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரரர் கோவிலில், நேற்று பக்தர்கள் மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சிவாலயங்களில் சிறந்த தலமாக உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கோவில் தரை மட்டத்திலிருந்து, 1,118 அடி உயரமும், செங்குத்தாக, 1,017 படி உச்சியில்
சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும், சோமவாரம் கொண்டாடுவது வழக்கம். கோவில் குடி பாட்டுக்காரர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சுவாமிக்கு வாழைப்பழம், தேங்காய் உடைத்து அபிஷேகம் செய்து வழிபட்டனர். தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை, பக்தர்கள் நடைபாதையில் கொட்டி வேண்டுதல்களை நிறைவேற்றினர். மேலும் வேண்டுதலை நிறைவேற்று வகையில், மொட்டை அடித்து வழிபாடு செய்தனர். நேற்று மூன்றாவது சோமவாரம் நிகழ்ச்சி என்பதால், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நலன் கருதி அரசு போக்கு வரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

