/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஐ.டி.ஐ., தேர்வு பெற்றவர்களுக்கு அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம்
/
ஐ.டி.ஐ., தேர்வு பெற்றவர்களுக்கு அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம்
ஐ.டி.ஐ., தேர்வு பெற்றவர்களுக்கு அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம்
ஐ.டி.ஐ., தேர்வு பெற்றவர்களுக்கு அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம்
ADDED : டிச 02, 2025 02:08 AM
கரூர், கரூரில், ஐ.டி.ஐ., தேர்வு பெற்ற மாணவர்களுக்கு வரும், 8ல் அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம் நடக்கிறது என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் வெண்ணைமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தேசிய தொழிற் பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் (அப்ரன்டீஸ்) சேர்க்கை முகாம் வரும், 8 காலை, 10:00 மணிமுதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது.
அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து, தொழிற் பழகுனர் பயிற்சி மேற்கொள்ளாதவர்கள் கல்வி, ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை, தேசிய மாநில தொழிற் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களை அறிய 04324-299422, 9003365600, 9443015914, 9566992442 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.