ADDED : ஏப் 10, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம் : லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி, கருப்பத்துார், பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 200 ரூபாய், பூவன் வாழைத்தார், 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாழைத்தார்களை உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
