ADDED : ஜூன் 24, 2026 04:56 AM

கரூர்:'தமிழ்
மாநில விவசாய தொழிலாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட
செயலாளர் தங்கவேல் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம்
நடந்தது.
அதில், கிராம பஞ்சாயத்துக்களில், தேசிய ஊரக வேலை உறுதி
திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், வி.பி.ஜி., ராம்ஜி என்ற
புதிய சட்டத்திருத்தத்தை மத்திய பா.ஜ., அரசு திரும்ப பெற வேண்டும்,
ஒவ்வொரு ஆண்டும், 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், ஏழை மக்களுக்கு
வீடு கட்ட, 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும், நகராட்சி, டவுன்
பஞ்சாயத்துக்களிலும் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில்,
மாவட்ட தலைவர் பாலன், துணை செயலாளர் ஆண்டியப்பன், பொருளாளர்
தங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்பட, பலர்
பங்கேற்றனர்.
