/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி வாசல்களை புனரமைக்க ரூ.10 கோடி: அமைச்சர்
/
பள்ளி வாசல்களை புனரமைக்க ரூ.10 கோடி: அமைச்சர்
ADDED : மார் 16, 2025 01:48 AM
பள்ளி வாசல்களை புனரமைக்க ரூ.10 கோடி: அமைச்சர்
கரூர்:''தமிழக பட்ஜெட்டில், பள்ளி வாசல்களை புனரமைப்பு செய்ய, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
கரூர், அத்தார் ஜமாத் ஈத்கா பள்ளி வாசலில் நேற்று மாலை, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தார். அவரை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உள்ளார். மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருக்கும் போதெல்லாம், முதல்வர் ஸ்டாலின் அதை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்.
கரூர் மாவட்டத்தில், பள்ளி வாசல் கட்ட உறுதுணையாக இருப்போம். தமிழக பட்ஜெட்டில், பள்ளி வாசல் புனரமைப்பு பணிக்காக, 10 கோடி ரூபாயை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். சென்னையில் ஹஜ் இல்லம் திட்டம், முதல்வர் ஸ்டாலினின் மகத்தான திட்டம்.
இவ்வாறு பேசினார்.மாநகராட்சி மேயர் கவிதா, பள்ளி வாசல் தலைவர் சையத் ஜலால், செயலாளர் சபியுல்லாகான், முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், மாநகர தி.மு.க., செயலர் கனகராஜ், துணை செயலர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.