/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விடியல் பயண திட்டத்தின் கீழ்10.54 கோடி பயணங்கள்: கலெக்டர்
/
விடியல் பயண திட்டத்தின் கீழ்10.54 கோடி பயணங்கள்: கலெக்டர்
விடியல் பயண திட்டத்தின் கீழ்10.54 கோடி பயணங்கள்: கலெக்டர்
விடியல் பயண திட்டத்தின் கீழ்10.54 கோடி பயணங்கள்: கலெக்டர்
ADDED : ஏப் 05, 2025 01:47 AM
விடியல் பயண திட்டத்தின் கீழ்10.54 கோடி பயணங்கள்: கலெக்டர்
கரூர்:கரூர் மாவட்டத்தில், மகளிருக்கான விடியல் பயண திட்டத்தின் கீழ், 10.54 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், மகளிருக்கான விடியல் பயண திட்டம், அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் கரூர்- 1, கரூர்-2, அரவக்குறிச்சி, குளித்தலை மற்றும் முசிறி ஆகிய, ஐந்து கிளைகளில் இருந்து, 130 நகர பஸ்கள் இயக்கப்படுகிறது.
கட்டணம் இல்லாத விடியல் பயண திட்டத்தின் கீழ், பெண்களின் பயண எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல், கரூர் மாவட்டத்தில், 10 கோடியே, 54 லட் சத்து, 95 ஆயிரத்து, 597 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிக்கு செல்லும் பெண்கள், கல்வி கற்க செல்லும் பெண்களும் அதிகளவில் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.