/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் மார்ச் 15ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
/
கரூரில் மார்ச் 15ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : மார் 04, 2025 01:30 AM
கரூரில் மார்ச் 15ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
கரூர்:வரும், 15ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் தான்தோன்றிமலை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், 15ல் நடக்கிறது. இதில், உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனை துறை, மருத்துவம் சார்ந்த துறைகள் உள்ளிட்ட, 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள், 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
வேலை வாய்ப்பு முகாமில், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. முகாமிற்கு வருகை புரியும் அனைத்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிபரம், கல்வி சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. முகாமில், பணி நியமனம்
பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.வேலை நாடுநர்களும், வேலையளிப்போரும் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 93452 61136 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். தனியார் துறை நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 93605 57145 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.