ADDED : பிப் 02, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வைக்கோல் கட்டு ரூ.150க்கு விற்பனை
கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிவாயம், வயலுார், புதுப்பட்டி, வீரவள்ளி, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம் ஆகிய பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, அறுவடை பணி நடந்து வருகிறது. அறுவடை முடிந்த வயல்களில் கிடக்கும் வைக்கோல்களை, சிறிய ரக டிராக்டர்களை கொண்டு கட்டுகளாக சுற்றும் பணி நடக்கிறது. ஒருகட்டு, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வைக்கோல் சுற்ற டிராக்டர் பயன்பாடால், வேலைச்சுமை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.