/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேவல் சண்டை நடத்திய4 பேர் மீது வழக்கு பதிவு
/
சேவல் சண்டை நடத்திய4 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : பிப் 13, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேவல் சண்டை நடத்திய4 பேர் மீது வழக்கு பதிவு
கரூர்:சின்னதாராபுரம் அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் போலீஸ் எஸ்.ஐ., அழகுராமு உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், காட்டுப்பாளையம் குளத்துகரை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேவல் சண்டை நடத்தியதாக பிரதீப், 40, மோகன், 40, பொன்னுசாமி, 40, துரைராஜ், 20, ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு சேவல், சேவல் காலில் கட்டப்படும், 12 கத்திகள் மற்றும் ஒரு பஜாஜ் பைக்கை, சின்னதாராபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.