/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சி கூட்டத்தில்45 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
கரூர் மாநகராட்சி கூட்டத்தில்45 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கரூர் மாநகராட்சி கூட்டத்தில்45 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கரூர் மாநகராட்சி கூட்டத்தில்45 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : மார் 01, 2025 01:34 AM
கரூர் மாநகராட்சி கூட்டத்தில்45 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கரூர்:கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம், மேயர் கவிதா தலைமையில், மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது.
அதில், தமிழகத்தில் விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை, புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பது, கரூர் மக்களின் கனவு திட்டமான, புதிய பஸ் ஸ்டாண்ட் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, உரிய நிதியை பெற்று தந்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவித்து கொள்வது உள்ளிட்ட, தீர்மானங்களை மேயர் கவிதா கொண்டு வந்தார்.
அதை தொடர்ந்து சிமென்ட் சாலை, மண் சாலைகளை, தார் சாலையாக மாற்றி அமைக்க நிதி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின், அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, துணை மேயர் தாரணி சரவணன் தீர்மானங்களை கொண்டு வந்தார். பிறகு நடந்த கூட்டத்தில், 45 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் மா.கம்யூ., கட்சி கவுன்சிலர்கள் யாரும் கோரிக்கைகள், புகார்கள் குறித்து எதுவும் பேசாததால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக, மேயர் கவிதா அறிவித்தார்.
கமிஷனர் சுதா, மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா, அன்பரசன், சக்திவேல், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சுரேஷ், தினேஷ் குமார், மா.கம்யூ., கட்சி கவுன்சிலர் தண்டபாணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.