/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'கடந்த நான்கு ஆண்டுகளில் 5,394 விதை மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது'

ADDED : மே 20, 2025 02:19 AM
கரூர், கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், 5,394 விதை மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன், கரூர் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ரமேஷ் குமார், வேளாண்மை அலுவலர் வினோதா ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக வேளாண்மை துறை சார்பில் செயல்படும், கரூர் விதை பரிசோதனை நிலையம் மூலம், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய உபகரணங்களை கொண்டு, விதைகளின் தரத்தை துல்லியமாக பரிசோதித்து,
விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கி வருகிறது. நெல், உளுந்து, சோளம், பாசிப்பயறு, நிலக்கடலை, எள், மக்காச்சோளம் மற்றும் காய்கறி விதைகள் உள்ளிட்ட அனைத்து வகையான விதைகளின் முளைப்பு திறன், ஈரப்பதம், புற துாய்மை பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.கடந்த, நான்கு ஆண்டுகளில் சான்று விதை மாதிரிகள், 2,851, ஆய்வாளர் விதை மாதிரிகள், 1,456, பணி விதை மாதிரி, 1,087 உள்பட மொத்தமாக, 5,394 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 730 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.