தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மக்கள் குறைதீர் கூட்டம்: 590 மனுக்கள் குவிப்பு

மக்கள் குறைதீர் கூட்டம்: 590 மனுக்கள் குவிப்பு

மக்கள் குறைதீர் கூட்டம்: 590 மனுக்கள் குவிப்பு


ADDED : மார் 25, 2025 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2025 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மக்கள் குறைதீர் கூட்டம்: 590 மனுக்கள் குவிப்பு

நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 590 மனுக்கள் குவிந்தன.

அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், எட்டு பேருக்கு, 22,960 ரூபாய் மதிப்பில், காதொலி கருவிகள் உள்பட, 10 பேருக்கு, 23,528 ரூபாய் மதிப்பில், உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சுமன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பிரபாகரன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us