/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியபா.ஜ.,வினர் 65 பேர் கைது
/
கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியபா.ஜ.,வினர் 65 பேர் கைது
கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியபா.ஜ.,வினர் 65 பேர் கைது
கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியபா.ஜ.,வினர் 65 பேர் கைது
ADDED : மார் 18, 2025 01:43 AM
கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியபா.ஜ.,வினர் 65 பேர் கைது
கரூர்:டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்துள்ள முறை கேடுகளை கண்டித்து, சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, முன்னாள் தேசிய செயலாளர் ெஹச்., ராஜா உள்ளிட்ட, பா.ஜ., நிர் வாகிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அதை கண்டித்து, நேற்று மாலை கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால், தடையை மீறி மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமையில், டாஸ்மாக் நிறுவன முறைகேடுகளை கண்டித்தும், மாநில பா.ஜ., தலைவர் அண் ணாமலை உள்ளிட்ட, நிர்வாகிகளை விடுதலை செய்யக்கோரியும், கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம்
நடந்தது.இதையடுத்து, அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம், பொதுச்செய லாளர் சக்திவேல் முருகன், செயலாளர் செல்வ ராஜ், முன்னாள் மாவட்ட செய்தி தொடர் பாளர் மாரிமுத்து உள்பட, நான்கு பெண்கள் உள்பட, 65 பேரை கரூர் டவுன் போலீசார் கைது
செய்தனர்.