/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும், குழியுமான தார்ச்சாலையால் விபத்து
/
குண்டும், குழியுமான தார்ச்சாலையால் விபத்து
ADDED : ஆக 26, 2024 02:27 AM
கரூர்: கரூர் அருகே, பெரிய குளத்துப்பாளையம் - மூர்த்திப்பாளையம் சாலை வழியாக, பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
அந்த சாலையில், அதிகளவில் வீடுகள் உள்ளன. இந்நிலையில், பெரிய குளத்துப்பாளையம் -மூர்த்திப்பாளையம் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பெரும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்கிறவர்கள், அடிக்-கடி விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர்.
எனவே, பெரிய குளத்துப்பாளையம் - மூர்த்திப்பாளையம் சாலையை, தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையை உடனடி-யாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்-பார்க்கின்றனர்.

