/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரியாற்றில் நீர் வரத்து அதிகரிப்பு ஆற்றுப்பகுதிக்கு செல்ல தடை விதிப்பு
/
காவிரியாற்றில் நீர் வரத்து அதிகரிப்பு ஆற்றுப்பகுதிக்கு செல்ல தடை விதிப்பு
காவிரியாற்றில் நீர் வரத்து அதிகரிப்பு ஆற்றுப்பகுதிக்கு செல்ல தடை விதிப்பு
காவிரியாற்றில் நீர் வரத்து அதிகரிப்பு ஆற்றுப்பகுதிக்கு செல்ல தடை விதிப்பு
ADDED : ஆக 03, 2024 01:08 AM
கரூர்,கரூர் மாவட்டத்தில், காவிரியாற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. இதனால், கரையோர பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஒரு லட்சத்து, 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், கரூர் அருகே நேற்று மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 156 கன அடி தண்ணீர் வந்தது.
அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், ஒரு லட்சத்து, 65 ஆயிரத்து, 636 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 700 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
தொடர்ந்து தண்ணீர் வருவதால், கரூர் மாவட்டத்தில் கரையோர பகுதிகளில், குடியிருப்பு வாசிகள் ஆற்றுப்பகுதி
களுக்கு செல்ல தடை விதித்து, தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், சவுக்கு கட்டைகள் கட்டப்பட்டுள்ளன.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,886 கன அடியாக தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 88.36 அடியாக இருந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 1,358 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, 1,367 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 251 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.64 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.