/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : பிப் 25, 2025 04:33 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.
முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக்கடன்கள், பட்டா மாறுதல், ஜாதிச்சான்று, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திற-னாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 410 மனுக்கள் வரப்பெற்றன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6 காது கேளாத நபர்க-ளுக்கு தலா, 2,835 மதிப்பீட்டில் காதொலி கருவிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், 1 பயனா-ளிக்கு தற்காலிக குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை என மொத்தம், 8 பயனாளிகளுக்கு, 20,510 ரூபாய்- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்- கலெக்டர் சுவாதி ஸ்ரீ, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சக்தி பால-கங்காதரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், மாவட்ட பிற்ப-டுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.