/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டார்ஜிலிங் ஆப்பிள் விற்பனைக்கு குவிப்பு
/
டார்ஜிலிங் ஆப்பிள் விற்பனைக்கு குவிப்பு
ADDED : செப் 02, 2024 03:02 AM
கரூர்: வடமாநிலங்களில் இருந்து டார்ஜிலிங் ஆப்பிள் வரத்து, கரூ-ருக்கு வந்த வண்ணம் உள்ளது. ஒரு கிலோ ஆப்பிள் அதிக-பட்சம், 120 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு காலத்தில் பணக்காரர்களின் பழம் என அழைக்கப்பட்ட ஆப்பிள் தற்போது, இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட-மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆக., - செப்., - அக்., மாதங்களில்
ஆப்பிள் பழத்துக்கு நல்ல சீசன் காலமாகும். தமிழகத்தில் மலைப்பகுதியில் மட்டும் ஆப்பிள் குறைந்தளவே சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தின் ஆப்பிள் தேவைக்கு, வட மாநிலங்களையே நம்பி இருக்க வேண்-டிய நிலை
உள்ளது.ஆப்பிள் பழத்துக்கு சீசன் இல்லாத காலங்களில், ஒரு கிலோ ஆப்பிள், 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நி-லையில், வட மாநிலங்களில் கடந்த, 10 ஆண்டுகளாக ஆப்பிள் சாகுபடியின் பரப்பளவு அதிகரித்து
வருகிறது. இதனால், கடந்த ஒருவார காலமாக, தமிழகத்துக்கு வரும் ஆப்பிள் வரத்தும் அதிக-ரித்து வருகிறது. குறிப்பாக, மத்தியபிரதேசம், இமாச்சல பிரதேசம் பகுதிகளில் இருந்து டார்ஜிலிங் ஆப்பிள் வரத்து குவிய
தொடங்-கியுள்ளது.சில மாதங்களுக்கு முன், பெரிய அளவிலான கடையில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் தற்போது, சாலையோ-ரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக, 100 ரூபாயில் இருந்து, 120 ரூபாய் வரை
விற்பனை செய்யப்படுகிறது. வைட்டமின், புரத சத்துகள் அதிகம் உள்ள, ஆப்பிள் பழத்தை கரூரில் பொது மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.