/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில், 27 முதல்வர் மருந்தகம் கரூர் கலெக்டர் தகவல்
/
மாவட்டத்தில், 27 முதல்வர் மருந்தகம் கரூர் கலெக்டர் தகவல்
மாவட்டத்தில், 27 முதல்வர் மருந்தகம் கரூர் கலெக்டர் தகவல்
மாவட்டத்தில், 27 முதல்வர் மருந்தகம் கரூர் கலெக்டர் தகவல்
ADDED : பிப் 25, 2025 04:36 AM
கரூர்: மாவட்டத்தில், 27 முதல்வர் மருந்தகம் அமைக்கப்படவுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சிக்குஉட்பட்ட, தான்தோன்றிமலையில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பின், கலெக்டர் தங்கவேல் கூறியதாவது: கரூர் மாவட்டத்திற்கு, 11 கூட்டுறவு சங்கங்களும், 16 தொழில் முனைவோர் மூலம் முதல்வர் மருந்தகம் அமைக்கப்படவுள்ளது. இதில், குளித்தலை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம், குப்புச்சிபா-ளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், உப்பிடமங்-கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், ஈசநத்தம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், க.பரமத்தி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம். சிந்தலவாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், கிருஷ்ணராயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மைலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தோகைமலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், வடசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்பட மொத்தம், 27 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படவுள்ளன.இதற்கு, தமிழ்நாடு மருந்து பணிகள் கழகம், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் மருந்து கொள்முதல் செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களுக்கு, 2 லட்சம் ரூபாய் மானியம், 50 சதவீதம் உட்கட்டமைப்பு வசதிக்கு, 50 சதவீதம் மருந்துகளாக வழங்கப்படும்.தனிநபர் தொழில் முனைவோருக்கு, 3 லட்சம் மானியம், 50 சத-வீதம் உட்கட்டமைப்பு வசதிக்கு, 50 சதவீதம் மருந்து களாக வழங்கப்படும்.இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தரணி சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.