ADDED : மார் 29, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்
மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம்
மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது,
சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 151 மது
பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல்
செய்தனர். மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி
வைத்திருந்ததாக ராமாயி, 54; செந்தில் குமார், 47; உள்பட, 21 பேரை கைது செய்தனர்.

