/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'மாயனுாரில் மினி டைடல் பூங்கா தொடங்க வேண்டும்'
/
'மாயனுாரில் மினி டைடல் பூங்கா தொடங்க வேண்டும்'
ADDED : ஜூலை 06, 2024 12:08 AM
கரூர் : மாயனுாரில், மினி டைடல் பூங்காவை அமைக்க வேண்டும் என, காவிரி நீர்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், தகவல் தொழில் நுட்ப துறையில், 500 பேருக்கு வேலை வாய்பை ஏற்படுத்த, புதிய டைடல் பூங்கா அமைக்கும் அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அந்த டைடல் பூங்காவை, மாய-னுாரில் அமைக்க வேண்டும்.
அதேநேரத்தில், வேலையில்லாத இளைஞர்களுக்கு, வேலை-வாய்ப்பை உருவாக்க, வருமான உச்சவரம்பு, ஐந்து லட்சம் ரூபாயில் இருந்து, எட்டு லட்ச ரூபாயாக உயர்த்திய அறிவிப்பும் பாராட்டத்தக்கது.
மேலும், தொழில் தொடங்க மாவட்டத்தில் குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்-கப்படும் என்பதால், கரூர் மாவட்டம் தொழில்கள் நிறைந்த மாவட்டமாக மாற வாய்ப்புள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.