/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சட்ட ரீதியாக அறங்காவலர் நியமனம் இல்லை: போலீஸ் ஸ்டேஷனில் புகார்
/
சட்ட ரீதியாக அறங்காவலர் நியமனம் இல்லை: போலீஸ் ஸ்டேஷனில் புகார்
சட்ட ரீதியாக அறங்காவலர் நியமனம் இல்லை: போலீஸ் ஸ்டேஷனில் புகார்
சட்ட ரீதியாக அறங்காவலர் நியமனம் இல்லை: போலீஸ் ஸ்டேஷனில் புகார்
ADDED : ஆக 24, 2024 07:09 AM
கரூர்: விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில், அறங்காவலர் நிய-மனம், சட்டரீதியாக நடக்கவில்லை என, அமராவதி நதிக்க-ரையில் விஸ்வபிரமாண சபையோர் கைலாய வாகன மண்டகப்படி மக்கள் நலச்-சங்கத்தினர், நேற்று கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்து, 163 கோவில்களில், அறநி-லையத்துறை சார்பில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக, சமீ-பத்தில் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியானது. அதில், 10 ஆயிரத்து, 536 கோவில்களில் அறங்காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 6,814 கோவில்களில் அறங்காவ-லர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 3,749 கோவில்களில் அறங்காவ-லர்கள் நியமிப்பது தொடர்பாக பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில், சட்டரீதியாக அறங்காவலர் நியமிக்கப்படவில்லை. அது குறித்து, விசாரித்து தமிழக அரசும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.