/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இருட்டில் நொய்யல் ஆற்றுப்பாலம்: விளக்குகள் அமைக்க எதிர்பார்ப்பு
/
இருட்டில் நொய்யல் ஆற்றுப்பாலம்: விளக்குகள் அமைக்க எதிர்பார்ப்பு
இருட்டில் நொய்யல் ஆற்றுப்பாலம்: விளக்குகள் அமைக்க எதிர்பார்ப்பு
இருட்டில் நொய்யல் ஆற்றுப்பாலம்: விளக்குகள் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 07, 2024 07:31 AM
கரூர்: கரூர் அருகே, நொய்யல் பாலத்தில் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-ஈரோடு சாலை, 21 வது கிலோ மீட்டரில், நொய்யல் ஆற்றின் குறுக்கே, பக்தவச்சலம் முதல்வராக இருந்த போது, பாலம் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. அதன் வழியாக கரூரில் இருந்து, நாள்தோறும் பஸ், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன. ஆனால், பாலம் கட்டப்-பட்டு பல ஆண்டுகள் ஆகியும், விளக்குகள் அமைக்கப்பட-வில்லை.
மேலும், பாலமும் குறுகிய நிலையில் உள்ளதால், வாகன ஓட்-டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். இதனால், அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, நொய்யல் ஆற்றுப்-பாலத்தில் விளக்குகள் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.