/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போதையில் கார் கண்ணாடி உடைத்த வாலிபர் கைது
/
போதையில் கார் கண்ணாடி உடைத்த வாலிபர் கைது
ADDED : ஆக 01, 2024 07:27 AM
கரூர்: வெள்ளியணை அருகே, குடிபோதையில் கார் கண்ணாடியை உடைத்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை ஜோதிவடம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி ஜோதி, 39; இவர், வீட்டுக்கு முன் மாருதி ஆல்டோ காரை நிறுத்தியிருந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி, 36, என்பவர் நேற்று முன்-தினம், குடி போதையில் காருக்கு முன்னால், நடனம் ஆடி யுள்ளார். அதை ஜோதி தட்டி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த பெரிசாமி, கல்லால் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார். இதன் மதிப்பு, 5,000 ரூபாய். இதுகுறித்து, ஜோதி அளித்த புகாரின்படி, பெரியசாமியை வெள்ளியணை போலீசார், கைது செய்து விசாரிக்கின்றனர்.