ADDED : ஆக 19, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., அக்ரஹாரத்தை சேர்ந்-தவர் கிருஷ்ணமூர்த்தி, 45; டிரைவர். இவருக்கு, இரண்டு மகள்கள். இவரது அக்கா புஷ்பா, 48, சேப்பளாப்பட்டியில் வசித்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால், புஷ்பா, தன் இரண்டு குழந்தைகள், கொழுந்தனார் ராமரின் மகன் சஞ்சித், 9, ஆகியோரை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்தார். மதியம், 2:00 மணிக்கு, ராஜேந்திரம் காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, சஞ்சித் தண்ணீரில் மூழ்கினான். இதை கவனித்த கிருஷ்ணமூர்த்தி சிறுவனை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்-டர்கள், சஞ்சித் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

