நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., வாலாந்துார் கிராமத்தில், பெரியசாமி கோவில் அமைந்துள்ளது. ஆடி, 28ம் நாளான நேற்று, இக்கோவில் திருவிழாவையொட்டி, கிராம மக்கள் திரண்டு, கோவில் வேல், அரிவாள், பூஜை சாமான்கள், கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் வைத்து பூஜை செய்து, தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
இதேபோல், கிராமப்புற கோவில்களில் உள்ள சுவாமி சிலை, வேல், அரிவாள், பூஜை சாமான்களை காவிரி ஆற்றில் சுத்தம் செய்து, பூஜை செய்தனர். தொடர்ந்து, கடம்பவனேஸ்வரர் கோவி-லுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

