/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கன்று வீச்சு நோய் வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம்: கலெக்டர் தகவல்
/
கன்று வீச்சு நோய் வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம்: கலெக்டர் தகவல்
கன்று வீச்சு நோய் வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம்: கலெக்டர் தகவல்
கன்று வீச்சு நோய் வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம்: கலெக்டர் தகவல்
ADDED : பிப் 25, 2025 04:38 AM
கரூர்: கன்று வீச்சு நோய் தாக்காமல் தடுக்கும் வகையில், ப்ரூசெல்-லோசிஸ் தடுப்பூசி ஐந்தாம் கட்டமாக போடப்பட்டு வருகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்அவர், வெளியிட்ட அறிக்கை:
கன்று வீச்சு நோய் என்ற ப்ரூசெல்லா அபார்டஸ் என்னும், நுண்-ணுயிரியினால் ஏற்படும் நோயாகும். இந்நோய் பாதித்த கால்ந-டைகளில், கன்று வீச்சு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் கன்று ஈனாத நிலை ஏற்படும்.
இந்நோய் கால்நடைகளுக்கு வராமல் தடுக்க கன்று வீச்சு நோய் தடுப்பூசி (ப்ரூசெல்லா ஊநீர்) மருந்துகள், கரூர் மாவட்டத்தி-லுள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும், கால்நடை மருத்துவமனைகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.இது மாடுகளிலிருந்து பால் வழியாகவும் மற்றும் நேரடியாகவும் மனிதனுக்கு பரவும் நோயாகும். கன்று வீச்சு நோய் தடுப்பூசி, கன்றுகளுக்கு போடுவதன் மூலம் கால்நடைகளுக்கு இந்நோய் வராமல் தடுக்கலாம்.இத்தடுப்பூசி ஏற்கனவே கன்றுகளுக்கு நான்கு கட்டங்களாக போடப்பட்டுள்ளது. தற்போது, ப்ரூசெல்லோசிஸ் தடுப்பூசி ஐந்தாம் கட்டமாக வரும், மார்ச் 19 வரை கால்நடை நிலை-யங்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் போடப்படவுள்ளது. இத்தடுப்பூசி, 4-8 மாத வயதுடைய பெண் கன்றுகளுக்கு மட்டுமே போடப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

