நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளம்பெண் மாயம்
பாப்பாரப்பட்டி, நவ. 3-
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, பேடரஹள்ளியை சேர்ந்தவர் அமுதா, 27. இவரது கணவர் பூமணி. இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதால், அமுதா கணவரை பிரிந்து, கடந்த, 4 மாதங்களாக பாப்பாரப்பட்டியில் உள்ள, அவரது தாய் வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள பூ கடையில் பூ கட்டும் வேலைக்கு சென்று வந்தார். கடந்த மாதம், 29 முதல் அமுதா மாயமானார். இது குறித்து, அவரது பெற்றோர் புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.