ADDED : பிப் 18, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர்:கரூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், செயலாளர் நகுல்சாமி தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மாவட்ட தலைமை நீதிபதி ஒருதலைப்பட்சமாக நடப்பதை தவிர்க்க கோரியும், நீதிபதிகள்- வழக்கறிஞர்கள் ஆய்வு கூட்டத்தை உடனடியாக நடத்தகோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., காமராஜ் உள்பட, 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் நீதிமன்றத்தை, வழக்கறிஞர்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

