ADDED : மார் 19, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க., இப்தார் நோன்பு
அரவக்குறிச்சி:ரமலான் நோன்பை, இஸ்லாமிய மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த, 7ல் த.வெ.க., தலைவர் விஜய், சென்னையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், த.வெ.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர் சதீஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார். நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நோன்பு கஞ்சி, கார வகைகள், குளிர்பானங்கள், பிரியாணி வழங்கப்பட்டது.