/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை மண்டியில்வாழைத்தார்கள் விற்பனை
/
லாலாப்பேட்டை மண்டியில்வாழைத்தார்கள் விற்பனை
ADDED : ஏப் 04, 2025 01:13 AM
லாலாப்பேட்டை மண்டியில்வாழைத்தார்கள் விற்பனை
கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டையில், வாழைத்தார்கள் ஏலத்தில் விடப்பட்டன.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, கொம்பாடிப்பட்டி, வல்லம்,
பிள்ளபாளையம், வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, பொய்கைப்புத்துார், மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் உள்ள வாழைத்தார்களை, அறுவடை செய்து கமிஷன் மண்டிகளில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளது. பூவன் வாழைத்தார் ஒன்று, 400 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 450 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 250 ரூபாய்க்கு நேற்று விற்கப்பட்டது. ஒவ்வொரு வாழைத்தாருக்கும், 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். உள்ளூர் வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.

