வெண்ணந்துார்:வெண்ணந்துார் யூனியன், பழந்தின்னிப்பட்டி பஞ்சாயத்தில் வனப்பகுதி உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால், வனப்பகுதியில் ஆங்காங்கே தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, ராசிபுரம் தீயணைப்பு நிலையம் சார்பில், நிலையை அலுவலர் பலகார ராமசாமி தலைமையில் தீயணைப்பு துறையினர், வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திலும், வீடுகளிலும், கால்நடை தீவன சேமிப்பு பகுதியில் இருக்கும் தீ பரவாமல் எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விளக்கமளித்தனர்.
வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களுக்கு வரும் வனவிலங்குகள், விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் விழாமல் இருக்க எவ்வாறு வேலி அமைப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு, தீ தடுப்பு ஒத்திகை குறித்து செயல்முறை விளக்க பயிற்சியளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.