நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், பள்ளப்பட்டி தெற்கு தெருவில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட தெற்கு தெருவில், குப்பை கிடங்கை சுற்றி, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இதனை சுற்றி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது துர்நாற்றம் உள்பட பல்வேறு சுகாதார கேட்டால் தவித்து வருகிறோம்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், பல இன்னல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த திட்டத்தை கைவிடவும், குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.