நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் கரூர் பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், மண்மங்கலம் விஷ்வ மகாதானி பவனில், ஆசிரியர் தின விழா நடந்தது. அதில், 120 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கவுரவ சான்றுகளை, பிரம்ம குமாரிகள் இயக்க நிர்வாகி சாரதா வழங்கி, மகிழ்ச்சி நம் கையில் என்ற தலைப்பில் விளக்கவுரை பேசினார். பிறகு, வழிகாட்டி தியானம் நடந்தது.
பரமத்தி-வேலுார் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., சேகர், கோட்ட கலால் அலுவலர் சக்திவேல், உதவி ஆணையர் முருகேசன், நல்லாசிரியர் ராமசுப்பிரம ணியம் மற்றும் பிரம்ம குமாரிகள் இயக்கத்தினர் பங்கேற்றனர்.