ADDED : அக் 17, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை முன், ஜாக்டோ ஜியோ கரூர் மாவட்டம் சார்பில், தேர்தல் கால வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.