/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொதுமக்களை அச்சுறுத்திய மலை தேனீக்கள் அகற்றம்
/
பொதுமக்களை அச்சுறுத்திய மலை தேனீக்கள் அகற்றம்
ADDED : அக் 17, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டம் நொய்யல் அருகே, புங்கோடை குளத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம், 58. இவரது தோட்டத்தில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல், 55, என்பவர் மலை தேனீக்கள் கொட்டியதில் இறந்தார். புகழூர் தீயணைப்பு நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், தோட்டத்திற்கு சென்று மரத்தில் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த, ஆயிரக்கணக்கான மலை தேனீக்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.