/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 01:30 AM
கரூர், தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கம், கரூர் வட்ட கிளை சார்பில், தலைவர் துரை கண்ணு தலைமையில், கலெக்டர் அலுவலம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தி.மு.க., அரசு சட்டசபை தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 70 வயதை தாண்டிய ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்க வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை, பஞ்., செயலாளர் ஓய்வூதியர்களுக்கு, 7,850 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் சாமு வேல் சுந்தர பாண்டியன், துணைத்தலைவர் மோகன் குமார், செயலாளர் சக்திவேல், வட்ட செயலாளர் மாலதி உள்பட, பலர்
பங்கேற்றனர்.

