ADDED : நவ 27, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு டவுன் பஞ்சாயத்தில் உரிய பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில், மாநில அரசின் உத்தரவு படி, நியமன உறுப்பினர் தேர்வு பணிக்கு கடந்த ஜூலை மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பொன்மனராஜ் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் நேற்று நியமன உறுப்பினராக பதவியேற்றார்.
டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி, துணைத் தலைவர் வளர்மதி, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கிருஷ்ணன், கவுன்சிலர்கள் சசிக்குமார், இளங்கோவன், ராதிகா, டவுன் பஞ்சாயத்து அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

