ADDED : மே 29, 2026 05:50 AM
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், வைகாசி மாத பிர-தோஷம் நேற்று கொண்டாடப்பட்டது. பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:00 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்-ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்-றனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில், நேற்று மாசி மாத பிரதோஷ விழா நடந்தது. அதில், நந்தி சிலைக்கு வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. வைகாசி மாத பிர-தோஷத்தையொட்டி, மூலவர் மேகபாலீஸ்வரர் சிறப்பு அலங்கா-ரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
