/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில்3,111 வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவு

ADDED : ஏப் 03, 2025 01:41 AM
தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில்3,111 வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவு
கரூர்:தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில், 3,111 வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் தங்கவேல், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின், அவர் கூறியதாவது:கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து, அலுவலர்கள் பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், கலைஞரின் கனவு இல்லம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம், 78.75 கோடி ரூபாய் மதிப்பிலான, 3,777 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், 3,111 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள, 666 பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், பிரதான் மந்திரி கிராம சதாக் யோஜனா திட்டம் மூலம், 2.66 கோடி மதிப்பில் சீத்தப்பட்டி சாலை பணிகளையும், கல்லுமடை ஆதி திராவிடர் காலனியில் அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு திட்டத்தின் மூலம், 24 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும் விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கூறினார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீ லேகா தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்
பங்கேற்றனர்.