/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மாயம்
/
மொபட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மாயம்
ADDED : ஆக 25, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், ஆக. 25-
கரூரில், மொபட்டில் வைத்திருந்த பணத்தை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 38; கரூரில் உள்ள, எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 21ல் மேஸ்ட்ரோ மொபட் கவரில், 50 ஆயிரம் ரூபாயை வைத்து விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, மொபட்டில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, சதீஷ்குமார் போலீசில் புகார் செய்தார்.
கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

