ADDED : ஜூலை 06, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் குணசேகரன் தலை-மையில், புதிய கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
அதில், துணைத்தலைவர் பிரதாபன், நடந்து முடிந்த எம்.பி., தேர்-தலில், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற காரணமாக இருந்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்து பேசினார். அதை தொடர்ந்து, புகழூர் காகித ஆலை, சிமென்ட் ஆலைகளில் இருந்து, கரித்துாள் உள்ளிட்ட நச்சு பொருட்கள் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என, கவுன்சிலர்கள் நவநீத கிருஷ்ணன், இந்துமதி ஆகியோர் பேசினர்.
பிறகு, நகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்ப-டுத்தும் வகையில், 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நக-ராட்சி ஆணையாளர் ேஹமலதா, மேலாளர் நாகராஜ், துாய்மை பணி ஆய்வாளர் வள்ளி ராஜ் உள்பட கவுன்சிலர்கள் பங்கேற்-றனர்.