/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆபாசமாக சித்தரிப்பு 6 பேர் மீது வழக்கு
/
ஆபாசமாக சித்தரிப்பு 6 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 03, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை,
குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளியை சேர்ந்தவர் அனந்த பத்மநாபன், 59; யோகா மாஸ்டர்.
இவரது குடும்ப பெண்களை ஆபாசமாக திட்டியும், சித்தரித்தும், அவருடைய மொபைல் போன் எண்ணிற்கும், நண்பர் கண்ணன் என்பவரின் மொபைல் போன் எண்ணிற்கும், 'வாட்ஸாப்' மூலம் தகவல்களை அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து, அனந்த பத்மநாபன் கொடுத்த புகார்படி, தண்ணீர்பள்ளியை சேர்ந்த வெங்கடாஜலபதி, தங்கராஜ், திருச்சி டோல்கேட்டை சேர்ந்த சேதுபதி, சென்னை உள்ளகரம், வெங்கடாஜல சுப்பிரமணி, திருச்சி, கண்ணனுாரை சேர்ந்த சுகன்யா, ராஜேந்திரன் ஆகிய, ஆறு பேர் மீது, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.