/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் சிறு பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
கரூரில் சிறு பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
கரூரில் சிறு பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
கரூரில் சிறு பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜூலை 06, 2024 01:10 AM
கரூர், : கரூரில், சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சிறுபாலத்தில் சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்-றனர்.
கரூர் வடக்கு லட்சுமிபுரத்தில், நாரத கான சபா அருகில், சாலையின் குறுக்கே, சில மாதங்களுக்கு முன் சிறுபாலம் கட்டப்-பட்டுள்ளது. தற்போது, சிறுபாலத்தின் மேல் பகுதியில் சேதம் அடைந்துள்ளது.
மேலும், இணைப்பு சாலையில் போடப்பட்ட, தரமற்ற சிமென்ட் ஜல்லிக்கற்கள், சமீபத்தில் பெய்த மழையால் சிதறி கிடக்கின்றன. அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் சென்று வருகி-றது. அப்போது, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் சிறுபாலத்தில் தவறி விழுவோருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.