/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரத்தில் இரவு நேரங்களில் நிற்கும் கனரக வாகனங்களால் ஆபத்து
/
சாலையோரத்தில் இரவு நேரங்களில் நிற்கும் கனரக வாகனங்களால் ஆபத்து
சாலையோரத்தில் இரவு நேரங்களில் நிற்கும் கனரக வாகனங்களால் ஆபத்து
சாலையோரத்தில் இரவு நேரங்களில் நிற்கும் கனரக வாகனங்களால் ஆபத்து
ADDED : ஆக 22, 2024 01:42 AM
அரவக்குறிச்சி, ஆக. 22-
சாலையோரத்தில் நிற்கும் கனரக வாகனங்களால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில் உள்ள, தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் கனரக வாகன ஓட்டுனர்கள் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கின்றனர். எந்தவித சிக்னலும் இன்றி, கனரக வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால், தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் நின்று கொண்டிருக்கும் கனரக வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. இரவு நேர ரோந்து செல்லும் போலீசார், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி செய்து கொடுத்தால், தேசிய நெடுஞ்சாலையில் இடையூறு இன்றி வாகனங்கள் செல்ல முடியும்.