/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அய்யர்மலையில் தி.மு.க.. உறுப்பினர்கள் கூட்டம்
/
அய்யர்மலையில் தி.மு.க.. உறுப்பினர்கள் கூட்டம்
ADDED : செப் 17, 2024 01:27 AM
அய்யர்மலையில் தி.மு.க..
உறுப்பினர்கள் கூட்டம்
குளித்தலை, செப். 17-
அய்யர்மலையில், குளித்தலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது,
ஒன்றிய செயலர் சந்திரன் தலைமை வகித்தார். துணை செயலர் பெரியசாமி, ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் பூ ரமேஷ், அரசு வக்கீல் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், தோகைமலையில் நடந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ராமர் தலைமை வகித்தார். யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிகுமார், அவைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர். காவல்காரன்பட்டியில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலர் அண்ணாதுரை தலைமை வகித்தார். யூனியன் கவுன்சிலர் சின்னையன், மாவட்ட பிரதிநிதி சந்திரன், மாஜி யூனியன் குழு தலைவர் பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூன்று கூட்டங்களிலும் எம்.எல்.ஏ., மாணிக்கம், கட்சி
யின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.