/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுாரில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
/
மாயனுாரில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 14, 2024 01:36 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் வட்டார, வேளாண்மைத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், மாயனுார் சமுதாய நலக் கூடத்தில் விவசாயிகள் ஆலேசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டம் மற்றும் துவரை சாகுபடி குறித்த வழிமுறைகள், தோட்டக்கலைத்துறை சார்பில் பழ மரக்கன்றுகள் மானிய விலையில் வினியோகம் குறித்து எடுத்து கூறப்பட்டது. மேலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டம், மானியம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. மானிய விலையில் இயந்திரம் கிடைப்பது, வாடகை முறையில் இயந்திரங்கள் வழங்குவது குறித்தும் பேசப்பட்டது. பட்டுப்புழு வளர்ப்பு, மானியம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
வேளாண்மை அலுவலர் சரண்யா, உதவி தோட்டக்கலை அலுவலர் ஜெயசந்திரன், வேளாண்மை உதவி பொறியாளர் சத்தியமூர்த்தி, பட்டுப்புழு வளர்ப்பு இளநிலை ஆய்வாளர் ஜெயராமன், உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ், கால்நடை மருத்துவ அலுவலர் கோகுல், கிருஷ்ணராயபுரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முரளி கிருஷ்ணன், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.